தேசியம்
செய்திகள்

சந்திரனைச் சுற்றவுள்ள முதல் கனடியர் Jeremy Hansen

கனேடியர் ஒருவர் முதன் முறையாக நிலாவிற்கு செல்லும் விண்கலத்தில் பயணிக்கவுள்ளார்.

சந்திரனைச் சுற்றவுள்ள முதல் கனடியராக Jeremy Hansen தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

NASA, கனடிய விண்வெளி ஆய்வு நிலையத்துடன் இணைந்து நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்பை திங்கட்கிழமை (03) வெளியிட்டது.

Jeremy Hansen, Royal கனடியன் விமானப்படையில் படைத் தலைவராகவும், CF-18 விமானியான கடமையாற்றியவராவார்.

Jeremy Hansen தவிர மேலும் மூன்று அமெரிக்கர்கள் சந்திரனில் நீண்ட கால இருப்பை நிறுவுவதற்கான முயற்சியின் அடுத்த கட்டத்தை வழிநடத்தும் விண்வெளி வீரர்களாக அறிவிக்கப்பட்டனர்.

NASA, கனடிய விண்வெளி ஆய்வு நிலையம் என்பன கூட்டாக இணைந்து இந்த விண்கலத்தை விண்ணுக்கு ஏவ உள்ளது.

November 2024இல் இந்த விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட உள்ளது.

Related posts

கனடாவில் புதிய Omicron துணை திரிபின் 50க்கும் மேற்பட்ட தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

இடைத் தேர்தலில் வெற்றிபெற்றது Liberal அரசாங்கம்

Lankathas Pathmanathan

Torontoவின் COVID அவசரகால நிலை முடிவுக்கு வந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment