Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து John Tory விலகிய பின்னர் புதன்கிழமை (29) முதல் முறையாக Toronto நகர சபை கூடியது.
மூன்று நாட்கள் நடைபெறும் நகர சபை உறுப்பினர்கள் கூட்டத்தில் நகர முதல்வர் பதவிக்கான இடைத் தேர்தல் சட்டம் இயற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Toronto நகர முதல்வர் பதவிக்காக இடைத்தேர்தல் June மாதம் 26ஆம் திகதி நடைபெறும் என எற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இந்த திட்டத்திற்கான ஒப்புதலை நகரசபை உறுப்பினர்கள் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நகரசபை இடைத்தேர்தலுக்கான சட்டத்தை நிறைவேற்றியதும், நகர முதல்வர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகும்.
வேட்புமனுக்கள் April 3 ஆம் திகதி முதல் May 12 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், முன் கூட்டிய வாக்களிப்பு June 8 ஆம் திகதி முதல் June 13 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை பத்துக்கும் மேற்பட்ட வர்கள் நகர முதல்வர் பதவிற்கு போட்டியிடும் தமது எண்ணத்தை வெளியிட்டுள்ளனர்.