December 12, 2024
தேசியம்
செய்திகள்

2023-24 இல் மத்திய அரசின் பற்றாக்குறை $40.1 பில்லியன்

2023-24 இல் மத்திய அரசின் பற்றாக்குறை 40.1 பில்லியன் டொலராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த இலையுதிர் காலத்தின் பொருளாதார அறிக்கையில் கணிக்கப்பட்டதை விட 10 பில்லியன் டொலர் அதிகமான பற்றாக்குறையாகும்.

மத்திய Liberal அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland செவ்வாய்க்கிழமை (28) பிற்பகல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

மந்தமான பொருளாதாரம், Liberal அரசாங்கத்தின் புதிய செலவீனங்கள் இந்த பற்றாக்குறை அதிகரிப்பின் காரணிகளாக அமைந்துள்ளது.

சிறுபான்மை Liberal அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவு திட்டம் செவ்வாயன்று சமர்பிக்கப்பட்டது.

2027-28 வரை 70 பில்லியன் டொலர்களை Liberal அரசாங்கம் எவ்வாறு செலவழிக்க திட்டமிட்டுள்ளது என்பதை செவ்வாயன்று வெளியான வரவு செலவு திட்டம் கோடிட்டு காட்டுகின்றது.

A Made-in-Canada Plan என்ற தலைப்பிலான இன்றைய வரவு செலவு திட்டத்தில், மத்திய அரசின் பற்றாக்குறை இந்த நிதியாண்டில் 43 பில்லியன் டொலராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பற்றாக்குறை அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாகக் குறையும் எனவும், பற்றாக்குறை 2027-28 இல் 14 பில்லியன் டொலராக இருக்கும் எனவும் நிதியமைச்சர் Chrystia Freeland கூறினார்.

Related posts

83 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் Ontarioவில் தடுப்பூசியை பெற்றனர்!

Gaya Raja

துருக்கிக்கும், சிரியாவுக்கும் கனடா $10 மில்லியன் நிதியுதவி

Lankathas Pathmanathan

நாடளாவிய ரீதியில் குறைந்து வரும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

Leave a Comment