தேசியம்
செய்திகள்

2023 வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படும்?

Liberal அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (28) சமர்பித்த 2023 வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படும் சாத்தியக்கூறுகள் அதிகம் தோன்றியுள்ளது.

இந்த வரவு செலவு திட்டத்தை தனது கட்சி ஆதரிக்கும் என்பதை NDP தலைவர் Jagmeet Singh உறுதிப்படுத்தினார்.

இதன் மூலம் வரவு செலவு திட்டம் வாக்களிப்பின் போது நிறைவேற்றப்படும் நிலை தோன்றியுள்ளது.

இந்த வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட மளிகை தள்ளுபடி, பல் பராமரிப்பு ஆகிய திட்டங்களுக்கு NDP தலைவர் உரிமை கோரினார்.

Liberal அரசாங்கத்துடன் NDP செய்து கொண்ட ஒப்பந்தம் இந்த திட்டங்களை வரவு செலவு திட்டத்தில் இணைத்து கொள்ள அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியது என அவர் கூறினார்.

இந்த விடயத்தில் NDPயின் நிலைப்பாடு குறித்து பெருமை அடைவதாக Jagmeet Singh தெரிவித்தார்.

சுகாதாரப் பாதுகாப்பின் மிகப்பெரிய விரிவாக்கத்தை இந்த வரவு செலவு திட்டம் வழங்குகிறது எனவும் NDP தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

அதேவேளை இந்த வரவு செலவு திட்டத்தை Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre கடுமையாக விமர்ச்சித்தார்.

செலவின அதிகரிப்பு பணவீக்கம் என அவர் இதனை விமர்சித்தார்

பற்றாக்குறையை நீக்கும் திட்டம் Liberal அரசாங்கத்திடம் இல்லை எனவும் Pierre Poilievre கூறினார்.

Related posts

அரசு ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் திரும்ப வேண்டும்

Lankathas Pathmanathan

நிலநடுக்க மண்டலத்தில் உள்ளவர்களிடமிருந்து குடியேற்ற விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள கனடா முடிவு

Lankathas Pathmanathan

Vaughan நகர துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment