தேசியம்
கட்டுரைகள்

Oscar வென்ற கனடியர்கள்

ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற Academy விருது வழங்கும் நிகழ்வில் பல கனடியர்கள் முதல் முறையாக Oscar விருதுகளைப் பெற்றனர்.

சிறந்த தழுவல் திரைக்கதைக்கு விருது பெற்ற Sarah Polley

சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை Torontoவை சேர்ந்த Sarah Polley வென்றார்.

Women Talking” திரைப்படத்திற்காக இந்த விருதை அவர் பெற்றார்

Sarah Polley வென்ற முதலாவது Oscar விருது இதுவாகும்

Manitoba எழுத்தாளர் Miriam Toews எழுதிய 2018 நாவலின் தழுவலாக இந்த திரைக்கதையை Sarah Polley எழுதியிருந்தார்

சிறந்த நடிகருக்கான விருது வென்ற Brendan Fraser

கனடிய-அமெரிக்கரான Brendan Fraser, சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.

“The Whale” திரைப் படத்தில் நடித்ததற்காக இந்த Oscar விருதை அவர் வென்றார்.

Toronto சர்வதேச திரைப்பட விழாவிலும் அவருக்கு அண்மையில் விருது வழங்கப்பட்டது.

சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரத்திற்கான விருது வென்ற Adrien Morot

Montrealலில் பிறந்த ஒப்பனை கலைஞர் Adrien Morot மூன்று பேர் கொண்ட ஒப்பனை கலைஞர் பிரிவில் Oscar விருதை அவர் வென்றார்.

Judy Chin, Annemarie Bradley ஆகியோருடன் இணைந்து சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரத்திற்கான Oscar விருதை “The Whale” திரைப்படத்திற்காக Adrien Morot வென்றார்.

சிறந்த ஆவணத் திரைப்படத்திற்கான விருது பெற்ற Daniel Roher

Torontoவை சேர்ந்த இயக்குனர் Daniel Roher சிறந்த ஆவணத் திரைப்படத்திற்கான Oscar விருதை இம்முறை பெற்றார்.

அவரது “Navalny” ஆவணத் திரைப்படம் இந்த விருதை பெற்றது.

Navalny, ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalnyக்கு விஷம் கொடுத்தது குறித்த விசாரணைப் பார்வையாகும்.

Odessa Rae, Diane Becker, Melanie Miller, கனடியரான Shane Boris ஆகியோருடன் ரோஹர் வெற்றி பெற்றார்.

 

Related posts

பாகம் 1 – 2023 இல் கனடாவில் நடைமுறைக்கு வரும் சில புதிய சட்டங்களும் விதிகளும்

Lankathas Pathmanathan

நீங்கள் போதிப்பதை கொஞ்சம் பயிற்சியும் செய்து பாருங்கள்!

Gaya Raja

Ontario மாகாண அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment