கனடிய டொலரின் பெறுமதி அமெரிக்க டொலருடன் ஒப்பிடும்போது நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
புதன்கிழமை (08) கனேடிய டொலர் 72.54 அமெரிக்க டொலராக வர்த்தகம் செய்யப்பட்டது.
கனடிய மத்திய வங்கி, தனது வட்டி வீதத்தினை தொடர்ந்தும் 4.5 சதவீதமாக வைத்திருக்கும் அறிவிப்பினை வெளியிட்ட நிலையில் கனடிய டொலரின் பெறுமதி குறைந்துள்ளது.
கனடிய மத்திய வங்கி, கடந்த ஒரு வருடத்தில் முதல் முறையாக அதன் முக்கிய வட்டி விகிதத்தை நிலையானதாக வைத்திருக்க முடிவு செய்துள்ளது.