தெற்கு Ontarioவின் பெரும்பாலான பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் கனடாவினால் பனிப்பொழிவு, குளிர்கால புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (03) பின்னிரவுக்குள் தெற்கு Ontarioவின் பெரும்பாலான பகுதிகளில் 20 to 30 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
பலமான காற்றுடன் கூடிய கடுமையான பனிப்பொழிவு அபாயகரமான பயண நிலைமைகளை உருவாக்கும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது.
இந்த பனிப்பொழிவு காரணமாக Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் கால் பகுதியும் அதிகமான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன .
வெள்ளி இரவு 8 மணி முதல் Pearson ஊடான தனது அனைத்து விமான சேவைகளையும் WestJet இரத்து செய்துள்ளது.
இதேவேளை, விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன்னர் தமது விமானங்களின் நிலையை இணையம் ஊடாக உறுதி செய்யுமாறு Air கனடா தனது பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த பனிப்பொழிவு சனிக்கிழமை (04) காலை Quebec மாகாணத்தையும், Maritimes மாகாணங்களையும் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு Quebecகின் பல பகுதிகளில் சிறப்பு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Quebecகில் உள்ள சமூகங்கள் சனி காலை வரை 10 முதல் 15 சென்டிமீட்டர் வரை பனிபொழிவை எதிர்கொள்கின்றன.