கனடா, அமெரிக்கா வானில் அடையாளம் காணப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்ட பறக்கும் பொருட்கள் சீன கண்காணிப்புடன் தொடர்புடையவை இல்லை என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த வார இறுதியில் கனடா, அமெரிக்கா வானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அடையாளம் தெரியாத மூன்று பறக்கும் பொருட்கள் சீனா அல்லது வேறு எந்த நாட்டிலிருந்தும் வந்ததாக தெரியவில்லை என அமெரிக்க ஜனாதிபதி Joe Biden வியாழக்கிழமை (16) தெரிவித்தார்.
இந்தப் பறக்கும் பொருட்கள் கண்காணிப்பு திறன்களை கொண்டிருக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
இந்த மாத ஆரம்பத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன கண்காணிப்பு பலூன் உட்பட, வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்க வான்வெளியை பாதுகாத்ததற்காக மன்னிப்பு கோர போவதில்லை எனவும் Biden கூறினார்.
ஆனாலும் இந்தப் பொருட்கள் என்ன என்பதை இதுவரை அடையாளம் காணவில்லை என கனடிய பிரதமர் Justin Trudeau கூறினார்
வட அமெரிக்க வான்வெளியை பாதுகாப்பதை உறுதிசெய்ய அமெரிக்காவுடன் கனடா நெருக்கமாகச் செயல்படுவதாகவும் Trudeau கூறினார்.
சுட்டு வீழ்த்தப்பட்ட பொருட்களை மீட்க அமெரிக்க, கனேடிய இராணுவத்தினர் கடந்த வாரம் முயற்சிகளை ஆரம்பித்திருந்தனர்.
ஆனாலும் கடந்த வார இறுதியில் Huron ஏரியின் மீது சுட்டு வீழ்த்தப்பட்ட பொருளைத் தேடும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடுமையான வானிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக RCMP வியாழனன்று தெரிவித்தது