Ontario மாகாணத்தின் Ottawaவில் புதிதாக நிர்மாணிக்கப்படும் குடிமனை தொகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இடிபாடுகளில் இருந்து 2 பேர் மீட்கப்பட்டனர்.
கிழக்கு Ottawa கட்டுமான தளத்தில் பாரிய வெடிப்பு ஏற்பட்டதை அடுத்து, இடிபாடுகளில் இருந்து இரண்டு பேரை அவசரகால குழுவினர் மீட்டுள்ளனர்.
Orléans நகரில் முன்னெடுக்கப்படும் ஒரு புதிய குடிமனை தொகுதி மேம்பாட்டில் எரிவாயு கசிவு ஏற்பட்டதன் காரணமாக இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக அவசர பிரிவினர் தெரிவித்தனர்.
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இருவருடன் மேலும் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் இருவர் குழந்தைகள் என தெரியவருகிறது.
இந்த வெடிப்பின் காரணமாக 12 பேருக்கு சிகிச்சை அளித்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இவர்களில் எவருக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.