February 23, 2025
தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து விலகும் John Tory

Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து John Tory விலகுகிறார்.

COVID தொற்று காலத்தில் தனது அலுவலக ஊழியர் ஒருவருடன் உறவில் இருந்ததை ஏற்றுக்கொண்ட பின்னர் நகர முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக John Tory அறிவித்தார்.

வெள்ளிக்கிழமை இரவு ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் பதவி விலகல் அறிவித்தலை John Tory அறிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் தனக்கும் முன்னாள் அலுவலக ஊழியருக்குமான உறவை வெளிப்படுத்திய John Tory, இந்தத் தவறுக்காக தனது மனைவி, குடும்பத்தினர், வாக்காளர்கள் ஆகியோரிடம் மன்னிப்பு கோரினார்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பரஸ்பர சம்மதத்துடன் இந்த உறவு முடிவுக்கு வந்ததாக கூறிய John Tory, அந்த ஊழியர் நகர சபையில் இருந்து வெளியேறி வேறொரு இடத்தில் பணியாற்றி வருவதாகவும் கூறினார்.

துணை நகர முதல்வர் Jennifer McKelvie உட்பட நகர சபை ஊழியர்களுடன் இணைந்து எதிர்வரும் நாட்களில் ஒரு முறையான மாற்றத்தை உறுதி செய்யவுள்ளதாகவும் இந்த செய்தியாளர் சந்திப்பில் John Tory கூறினார்.

68 வயதான John Tory 2014ஆம் ஆண்டு நகர முதல்வராக தெரிவானவர்.

பின்னர் நடைபெற்ற 2018, 2022 தேர்தல்களில் அவர் வெற்றி பெற்றார்.

Related posts

தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கும் கனடியர்களின் எண்ணிக்கை குறைகிறது

Lankathas Pathmanathan

British Columbiaவில் மண்சரிவு காரணமாக குறைந்தது ஒருவர் பலி!

Lankathas Pathmanathan

Ontario மாகாண தேர்தல் பிரச்சார வரவு செலவு திட்டம் வெளியீடு

Leave a Comment