கனடாவில் திருடப்பட்டதாக கூறப்படும் $3.5 மில்லியன் மதிப்புள்ள வாகனங்கள் Maltaவில் கண்டுபிடிக்கப்பட்டன.
கப்பல் கொள்கலன்களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வாகனங்கள் மீண்டும் கனடாவுக்குத் திரும்பிய அனுப்பப்பட்டன.
$3.5 மில்லியன் மதிப்புள்ள 64 திருடப்பட்ட வாகனங்கள், சட்டவிரோதமாக விற்பனை செய்யத் தயாரான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக York பிராந்திய காவல்துறை கூறுகிறது.
இந்த வாகனங்கள் Toronto பெரும்பாகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
கனடிய எல்லை சேவை நிறுவனம், Malta துறைமுக அதிகார சபையின் உதவியுடன் இந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
இது தொடர்பான விசாரணையில் 18 பேர் March மாதம் 2021ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
அந்த நேரம் $4.5 மில்லியன் மதிப்புள்ள 70 திருடப்பட்ட வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.