தேசியம்
செய்திகள்

கனடா நோக்கி பயணிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இலவச பேருந்து பயண சீட்டுகளை வழங்கும் New York ?

கனடா நோக்கி பயணிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு New York நகரம் இலவச பேருந்து பயண சீட்டுகளை வழங்குவது குறித்து Quebec குடிவரவு அமைச்சர் ஆச்சரியம் வெளியிட்டுள்ளார்.

கனடாவில் புகலிடம் கோருவதற்காக வருபவர்களுக்கு New York நகரம் இலவச பேருந்து பயண சீட்டுகளை வழங்குவதான செய்தி ஆச்சரியமானது என Quebec குடிவரவு அமைச்சர் Christine Fréchette தெரிவித்தார்.

இது எல்லையில் உள்ள சூழ்நிலையை அவசரமாகத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் காட்டுவதாகவும் அவர் கூறினார்.

மத்திய அரசாங்கம் இந்த சிக்கலைத் தீர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Montrealலுக்கு தெற்கே உள்ள அதிகாரப்பூர்வமற்ற எல்லையை கடந்த ஆண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் கனடாவில் புகலிடம் கோருவதற்கு பயன்படுத்தியது தெரியவந்தது.

Related posts

நாடாளுமன்றத்திற்கு தேர்வான Liberals, NDP, Bloc Quebecois உறுப்பினர்கள் தடுப்பூசி போட வேண்டும்: கட்சி தலைமை வலியுறுத்தல்! 

Gaya Raja

இறையாண்மை சட்டம்  தவறானதால்ல: Alberta முதல்வர் Smith

Lankathas Pathmanathan

வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்த கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan

Leave a Comment