Conservative கட்சியின் முன்னாள் இடைக்காலத் தலைவர் Candice Bergen பதவி விலகினார்.
புதன்கிழமை (01) தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்ததாக அவர் கூறினார்.
அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என Bergen முன்னர் கூறியிருந்தார்.
அவர் 2008ஆம் ஆண்டு முதல் Manitoba மாகாணத்தில் Portage – Lisgar தொகுதியை பிரதிநிதித்துவ படுத்துகின்றார்.
Conservative கட்சி Erin O’Tooleலை தலைவர் பதவியில் இருந்து வெளியேற்ற வாக்களித்த பின்னர், Bergen கடந்த வருடம் February மாதம் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார்.
Bergen முன்னர் Stephen Harper அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர்.
பின்னர் இடைக்காலக் கட்சித் தலைவரான Rona Ambrose கீழ் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றியவர்.