தேசியம்
செய்திகள்

கனேடியர்களை திருப்பி அழைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: பிரதமர் Trudeau

வடகிழக்கு சிரியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனேடிய ஆண்களை திருப்பி அனுப்புவதற்கான கனடிய மத்திய நீதிமன்ற உத்தரவு குறித்து அரசாங்கம் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

இந்த உத்தரவு குறித்து மேல்முறையீடு செய்வதா அல்லது இதனை ஏற்றுக் கொள்வதா என்பதை தனது அரசாங்கம் இன்னமும் முடிவு செய்யவில்லை என பிரதமர் கூறினார்.

இந்த விடயத்தில் கனடியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எப்போதும் முன்னுரிமையாக இருக்கும் எனவும் Trudeau கூறினார்.

சிரிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 4 கனேடியர்களை மீண்டும் கனடாவுக்கு அழைத்து வர உதவுமாறு மத்திய அரசாங்கத்திற்கு மத்திய நீதிபதி கடந்த வாரம் உத்தரவிட்டார்.

விரைவில் இவர்களை கனடாவுக்கு அழைத்து வர தனது தீர்ப்பில் நீதிபதி கனடிய அரசாங்கத்திற்கு உத்தரவிட்டார்.

சிரியாவின் உள்நாட்டுப் போரின் போது அவர்கள் ISIS இல் இணைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

ஆனாலும் இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் எதுவும் பதிவாகவில்லை.

இவர்களை கனடாவுக்கு மீண்டும் அழைத்து வருவது குறித்த வழக்கு 2021ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் 6 பெண்கள், 13 குழந்தைகளும் அடங்குகின்றனர்.

ஏற்கனவே சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள், குழந்தைகளை மீண்டும் கனடாவுக்கு அழைத்து வருவதற்கு கனேடிய அரசாங்கம் ஒப்புக் கொண்டிருந்தது.

Related posts

March விடுமுறை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்படும்

Lankathas Pathmanathan

கனடாவுக்கான பயணத்தை இரத்து செய்யுமாறு வெளியான அறிவுறுத்தல் தவறானது

Gaya Raja

கனடாவிற்கு பயண அறிவுறுத்தல் விடுத்த இந்தியா!

Lankathas Pathmanathan

Leave a Comment