தெற்கு Ontarioவில் புதன்கிழமை (25) பிற்பகல் முதல் வியாழக்கிழமை (26) காலை வரை குறிப்பிடத்தக்க பனிப்பொழிவு சாத்தியமாகும் என எதிர்வு கூறப்படுகிறது.
சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, புதன்கிழமை மாலைக்குள் 10 முதல் 15 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு சாத்தியமாகும் என எதிர்வு கூறப்படுகிறது.
வியாழன் காலையிலும் மேலும் பனி எதிர்வு கூறப்படுகிறது.
வேகமாக குவியும் பனி பயணங்களை கடினமாக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.
சில நகராட்சிகளில் பனிப்பொழிவு 20 சென்டி மீட்டர் வரை இருக்கலாம் என எச்சரிக்கப்படுகிறது.
Toronto, Markham, Hamilton, Ottawa, Peel, London, Niagara, Peterborough, Waterloo, Windsor, Durham ஆகியவை இந்த வானிலை அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.