முன்னாள் Ontario குடியிருப்பு பாடசாலை பகுதியில் 171 சாத்தியமான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
St. Mary முன்னாள் வதிவிட பாடசாலை அமைந்துள்ள நிலத்தில் ஊடுருவும் radarரைப் பயன்படுத்தி நடத்திய விசாரணையில் குறைந்தது 171 சாத்தியமான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
Kenora, Ontarioவில் அமைந்துள்ள முன்னாள் குடியிருப்பு பாடசாலை தளத்தில் இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பாடசாலை அமைந்துள்ள நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சாத்தியமான மனித எச்சங்கள் புதை குழிகளாக இருக்கலாம் என நம்பப்படுகிறது
ஐந்து கல்லறை குறிப்புகளைத் தவிர, மீதமுள்ளவை எந்தவிதமான கல்லறை குறிப்புகளினால் குறிக்கப்படவில்லை என ஒரு அறிக்கையில் செவ்வாய்க்கிழமை (17) Wauzhushk Onigum முதற்குடி தேசம் தெரிவித்த.
இந்த விசாரணை கடந்த May மாதம் ஆரம்பமானது.
இந்த விசாரணையின் அடுத்த கட்டமாக புதைகுழிகளின் எண்ணிக்கையை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தவிரவும் முதல் விசாரணையின் போது உள்ளடக்கப்படாத பல கூடுதல் தளங்களை விசாரணைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.