December 12, 2024
தேசியம்
செய்திகள்

Quebecகில் 11 ஆயிரம் பேர் மின்சாரம் இல்லாத நிலை

கடந்த வாரம் ஆரம்பமான கடுமையான குளிர்காலப் புயல் காரணமாக Quebec மாகாணத்தில் 11,000 பேர் மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது.

புதன்கிழமை (28) மாலை 4:30 மணி வரை 11,000 பேர் மின்சாரம் இல்லாத நிலை தொடர்வதாக Hydro Quebec தெரிவித்தது.

பணியாளர்கள் மின்சாரத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என Hydro Quebec ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

ஆனாலும் சில வாடிக்கையாளர்கள் இன்னும் சில நாட்களுக்கு மின்சாரம் இல்லாமல் இருப்பார்கள் எனவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை (23) கடுமையான குளிர்காலப் புயல் காரணமாக 350 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் Quebec மாகாணத்தில் மின்சாரத்தை இழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontarioவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் January முதல் booster தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம்

Lankathas Pathmanathan

Ontario அமைச்சரவையில் மாற்றம்!

Lankathas Pathmanathan

தடுப்பூசி திட்டங்களை தற்காலிகமாக தாமதப்படுத்த அல்லது இடைநிறுத்த கனடாவின் மூன்று மாகாணங்கள் முடிவு!

Lankathas Pathmanathan

Leave a Comment