Ontario மாகாண காவல்துறை அதிகாரி, Hagersvilleலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை (27) மாலை Mississaugas of the Credit First Nation பகுதிக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
காணாமல் போனதாகக் கூறப்பட்ட வாகனத்தை நிறுத்திய பின்னர், Haldimand OPP அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.
உயிர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
மரணமடைந்த அதிகாரி Constable Grzegorz Pierzchala என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஒரு ஆண், பெண் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட ஆண் 25 வயதான Randall McKenzie என காவல்துறையினர் தெரிவித்தனர்.
OPP அதிகாரியின் மரணம் குறித்து Ontario முதல்வர் Doug Ford தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.