ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வளையம் மீதான விசாரணையின் அடிப்படையில் 51 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
வாகனங்கள் திருடப்பட்டது குறித்த விசாரணையில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விசாரணை Toronto பெரும்பாகத்தில் அதிகரித்து வரும் வாகன திருட்டுக்கு காரணமான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்களை மையமாகக் கொண்டிருந்தது.
காவல்துறையினரால் 215 திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட வாகனங்களின் மதிப்பு 17 மில்லியன் டொலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
பல மாதங்கள் தொடர்ந்த விசாரணையில் 150க்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் பதிவாகின.
கடந்த May மாதம் ஆரம்பமான காவல்துறையினரின் விசாரணையில் பல ஆயுதங்கள், போதை பொருட்கள், பணம் ஆகியவை மீட்கப்பட்டன.