தேசியம்
செய்திகள்

Vaughan நகர துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் பலி

Ontario மாகாணத்தின் Vaughan நகரில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஆறு பேர் பலியாகியுள்ளனர்.

Jane Street and Rutherford Road சந்திப்புகளுக்கு அருகில் உள்ள தொடர்மாடிக் கட்டிடம் ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த இந்த சம்பவத்தில் பலியானவர்களில் சந்தேக நபரும் அடங்குவதாக தெரியவருகிறது.

சந்தேக நபரான ஆண் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் உயிர் ஆபத்தான நிலையில் உள்ளதாக York பிராந்திய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Related posts

சீனாவின் தலையீட்டால் தேர்தலில் வெற்றி பெற்ற ஊகத்தை நிராகரித்த Vancouver நகர முதல்வர்

Lankathas Pathmanathan

4.5 சதவீதமாக அதிகரிக்கும் வட்டி விகிதம்?

Lankathas Pathmanathan

இரண்டு மாதத்திற்குள் கனடா திரும்பிய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் COVID தொற்றால் பாதிப்பு!

Gaya Raja

Leave a Comment