கனடா பல் மருத்துவ கொடுப்பனவு திட்டத்தின் ஊடாக ஒரு இலட்சம் குழந்தைகள் பலன் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதி இதற்கான விண்ணப்பங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
ஒரு இலட்சம் குழந்தைகள் என்ற புதிய மைல் கல்லை எட்டியுள்ளதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு இலட்சம் என்பது இதுவரை பலன் பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது என சுகாதார அமைச்சருக்கான தகவல் தொடர்பு இயக்குனர் தெரிவித்தார்.
December 1ஆம் திகதி முதல் கனேடிய அரசு இடைக்கால கனடா பல் மருத்துவ கொடுப்பனவை நடைமுறைப்படுத்தி உள்ளது.
இது Liberal அரசாங்கம் NDP கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பத்தின் ஒரு பகுதியாகும்.