February 23, 2025
தேசியம்
செய்திகள்

பிரதமருடன் அவசர சந்திப்புக்கு மாகாண, பிராந்திய முதல்வர்கள் அழைப்பு

பிரதமர் Justin Trudeauவுடன் அவசர சந்திப்புக்கு மாகாண, பிராந்திய முதல்வர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்

சுகாதாரப் பாதுகாப்பு நிதியை மாகாணங்களுக்கு அதிகரிப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக பிரதமருடன் சந்திப்பொன்றை முதல்வர்கள் கோருகின்றனர்.

மாகாண, பிராந்திய தலைவர்கள் வெள்ளிக்கிழமை (09) Winnipeg நகரில் சந்திப்பொன்றை நடத்தினர்.

இந்த சந்திப்பின் பிரதமருடன் சந்திப்புக்கு மாகாண முதல்வர்கள் இணைந்து அழைத்துள்ளனர்.

சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளின் அதிக சுமையை மத்திய அரசாங்கம் பொறுக்க வேண்டும் என முதல்வர்கள் கோருகின்றனர்.

மத்திய அரசின் கூடுதல் நிதிகளுக்கான நிபந்தனைகளை ஏற்க மறுத்ததையும் முதல்வர்கள் நியாயப்படுத்தியுள்ளனர்

மத்திய அரசாங்கம் நாடு முழுவதும் உள்ள சுகாதாரச் செலவுகளில் 35 சதவீதத்தை பொறுப்பேற்க வேண்டும் என முதல்வர்கள் வலியுறுத்துகின்றனர்.

மாகாண சுகாதார அமைச்சர்கள் கடந்த மாதம் Vancouverரில் மத்திய சுகாதார அமைச்சர் Jean-Yves Duclosசிடம் இதே கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

Related posts

Paris Olympics: கனடாவின் முதலாவது பதக்கம்

Lankathas Pathmanathan

Nova Scotia: தொற்றின் அதிகரிப்பு காரணமாக Halifax பகுதியில் கட்டுப்பாடு!

Gaya Raja

இந்த ஆண்டு தேர்தல் இல்லை: Ontario முதல்வர்!

Lankathas Pathmanathan

Leave a Comment