தேசியம்
செய்திகள்

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையுடன் உடன்படவில்லை: வருவாய்த்துறை அமைச்சர்

விரைவான ஆனால் வீணான COVID நிதி உதவி, தடுப்பூசி திட்டங்கள் குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் சில விபரங்களை Liberal அரசாங்கம் விமர்சித்துள்ளது.

கனடிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட COVID நிதி உதவியில் 4.6 பில்லியன் டொலர்கள் தகுதியற்ற பெறுநர்களுக்குச் சென்றுள்ளது என செவ்வாய்க்கிழமை (06) வெளியான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தெரிவித்தது.

புதன்கிழமை (07) நாடாளுமன்ற கேள்வி நேரத்தின் போது இந்த அறிக்கையில் வெளியான விபரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

ஆனாலும் இந்த அறிக்கையின் சில விபரங்களுடன் உடன்படவில்லை என கனடிய வருமான திணைக்களத்திற்கு பொறுப்பான தேசிய வருவாய்த்துறை அமைச்சர் Diane Lebouthillier கூறினார்.

இது கணக்காய்வாளர் நாயகத்தின் தவறு அல்ல என கூறிய அமைச்சர் Lebouthillier, இந்த அறிக்கையை தயாரிக்க எதிர்க்கட்சிகள் அவருக்கு அழுத்தம் கொடுத்ததை நாம் அனைவரும் அறிவோம் எனவும் தெரிவித்தார்.

இந்த கருத்திற்கு தேசிய வருவாய்த்துறை அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் என Conservative கட்சி வலியுறுத்தியுள்ளது

அமைச்சரின் கருத்தை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் எனவும் எதிர்க்கட்சி கூறியது.

Related posts

மூன்று மாகாணங்களில் கொடிய நுண்ணுயிர் தொற்று!

Lankathas Pathmanathan

தென்கொரியா கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களில் கனடியரும் ஒருவர்

Lankathas Pathmanathan

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு!

Lankathas Pathmanathan

Leave a Comment