Ontario அரசாங்கம் மில்லியன் கணக்கான COVID தடுப்பூசிகளை வீணடித்துள்ளது என புதிய அறிக்கை ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
Booster தடுப்பூசியின் தேவையை அதிகமாக மதிப்பிட்ட நிலையில் மில்லியன் கணக்கான தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக Auditor general Bonnie Lysyk தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் .
Ontario மாகாணம் February மாதம் முதல் June மாதங்களுக்கு இடையில் 38 சதவீத COVID தடுப்பூசிகளை வீணடித்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
ஒட்டுமொத்தமாக Ontarioவில் ஒன்பது சதவீதம் அல்லது 3.4 மில்லியன் COVID தடுப்பூசிகள் வீணானதாக கூறப்படுகிறது.
இவற்றில் பாதி விரையத்தை தவிர்த்திருக்கலாம் என Auditor general கூறுகின்றார்.