சிறார் பாலியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட நான்கு ஆண்களின் மேல்முறையீட்டு மனுக்களை கனடாவின் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (24) நிராகரித்துள்ளது.
குழந்தை பாலியல் கடத்தல் தொடர்பான பல ஆண்டு விசாரணையின் ஒரு பகுதியாக, 2017ஆம் ஆண்டில் York பிராந்திய காவல்துறையால் 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் நால்வர் முன்வைத்த மேல்முறையீட்டு மனுக்களை கனடாவின் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இவர்கள் நால்வரும் தங்கள் வழக்குகளை தள்ளுபடி செய்வதற்கான காரணங்களாக காவல்துறையின் சிக்கலை மேற்கோள் காட்டியிருந்தனர்.
இவர்கள் நால்வரும் தங்கள் வழக்குகளை 2021 இல் Ontario மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும், 2022 இலை துளிர் காலத்தில் கனடா உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தனர்.
இவர்களின் மேல் முறையீடுகளை நிராகரிப்பதற்கான தீர்ப்பு ஒன்பது நீதிபதிகளாலும் ஒருமனதாக எடுக்கப்பட்டிருந்தது.