December 12, 2024
தேசியம்
செய்திகள்

முற்றுகை போராட்டத்தின் முதலாவது ஆண்டை குறிக்கும் மற்றுமொரு போராட்டம்?

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின் முதலாவது ஆண்டை குறிக்கும் வகையில் மற்றுமொரு முற்றுகை போராட்டம் திட்டமிடப்படுகிறது.

முற்றுகை போராட்டத்தின் அமைப்பாளர் ஒருவர், எதிர்வரும் February மாதத்தில் Ottawaவில் மீண்டும் இணைவதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறார்.

அனைத்து தடுப்பூசி கட்டுப்பாடுகளையும் முடிக்க கோரிய Canada Unity குழுவின் நிறுவனர் James Bauder புதிய போராட்டம் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

‘Freedom Convoy 2.0 என்ற பெயரில் மற்றொரு முற்றுகை போராட்டம் February 17 முதல் 21 வரை Ottawaவில் திட்டமிடப்படுவதாக Bauder தெரிவித்தார்.

கடந்த February 20ஆம் திகதி காவல்துறையினர் போராட்டக்காரர்களை அகற்றியபோது James Bauder கைது செய்யப்பட்டார்.

சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், நீதிமன்ற உத்தரவை மீறுதல், அமைதி காக்கும் அதிகாரிக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அவர் Ottawa நகருக்குத் திரும்பக் கூடாது என்ற நிபந்தனையின் கீழ் விடுவிக்கப்பட்டார்.

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவை விசாரிக்கும் ஆணையத்தில் இந்த மாத ஆரம்பத்தில் சாட்சியமளித்தவர்களில் Bauder ஒருவராவார்.

இந்த நிலையில் புதிய போராட்டத்திற்கான அழைப்பு குறித்து அறிந்திருப்பதாக Ottawa காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Related posts

அறிவிக்கப்பட்டது Conservative கட்சியின் நிழல் அமைச்சரவை

Gaya Raja

September 20 கனடாவில் தேர்தல்!

Gaya Raja

கைத்துப்பாக்கிகளை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக தடை செய்யும் கனடா

Leave a Comment