தேசியம்
செய்திகள்

இரத்தம் சிந்துவது குறித்த அச்சம்: தொடரும் அவசரகாலச் சட்டம் குறித்த விசாரணை

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அவசரகாலச் சட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பிரதமருக்கும் முதல்வர்களுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது.

அவசரகாலச் சட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பிரதமருக்கும் மாகாண முதல்வர்களுக்கும் இடையிலான உரையாடல் குறித்து பிரதமரின் உதவியாளர் குறிப்புகள் வியாழக்கிழமை (10) வெளியாகின.

Alberta, British Columbia, Ontario, Newfoundland and Labrador, P.E.I. ஆகிய மாகாணங்களின் முதல்வர்கள் அவசரகாலச் சட்டம் அறிவிக்கப்படுவதற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியதாக பிரதமரின் உதவியாளரின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

Albertaவில் ஒரு வன்முறை குழு மரணிக்கவும் தயாராக இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிப்பதாக இந்த உரையாடலின் போது மாகாண முதல்வர் Jason Kenney கூறியுள்ளார்.

ஆனாலும் Manitoba, Saskatchewan, Nova Scotia, Quebec, New Brunswick ஆகிய மாகாணங்களின் முதல்வர்கள் அவசரகாலச் சட்டம் அறிவிக்கப்படுவதற்கு தமது எதிர்ப்பை பிரதமருடனான தொலைபேசி அழைப்பின் போது பதிவு செய்திருந்தனர்.

உண்மையில் நான் இரத்தம் சிந்துவதை பார்க்க விரும்பவில்லை என பிரதமருடனான உரையாடலின் போது Northwest பிரதேசங்களின் முதல்வர் கூறியதாக பிரதமரின் உதவியாளரின் குறிப்பு கூறுகிறது.

இராணுவத்தை உதவிக்கு அழைப்பது ஒரு கடைசி முயற்சி என பிரதமர் Justin Trudeau இந்த தொலைபேசி அழைப்பின் போது முதல்வர்களுக்கு உறுதியளித்தார்.

அவசரகாலச் சட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் எடுத்த பொது ஒழுங்கு அவசர ஆணையத்தின் விசாரணைகள் தொடரும் நிலையில் இந்த தகவல்கள் வெளியானது.

Related posts

September வரை பாடசாலைகளை மூடி வைப்பது குறித்து Ontario ஆலோசிக்கிறது

Gaya Raja

சட்டமானது தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் கல்வி வாரம்

Gaya Raja

கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என ஆலோசனை

Leave a Comment