தேசியம்
செய்திகள்

கனடாவில் சீனாவின் தலையீடு குறித்து CSIS கவனம் செலுத்துகிறது

கனடாவில் சீனாவின் தலையீடு குறித்து CSIS எனப்படும் கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை நிறுவனம் கவலை வெளியிட்டது.

கனேடிய அரசியலில் செல்வாக்கு செலுத்தும் சீனாவின் முயற்சிகள் குறித்து அதிகமாக அக்கறை கொண்டுள்ளதாக கனடாவின் உளவு நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி கனடாவில் தங்கள் சொந்த தேசிய நலன்களை மேம்படுத்துவதில் ஆர்வமாக உள்ளது என நாடாளுமன்ற விவகாரக் குழுவிடம் அவர் தெரிவித்தார்.

சீனாவின் தேசிய நலன்களை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளை குறிவைக்க சீனாவும் பிற நாடுகளும் முயன்று வருவதாக CSIS பல ஆண்டுகளாக தெரிவித்து வருகிறது

சீன கம்யூனிஸ்ட் கட்சி கனடா உட்பட உலகம் முழுவதும் காவல் நிலையங்களை நிறுவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கனடாவில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சீன காவல் நிலையங்கள் குறித்து விசாரித்து வருவதாக அண்மையில் RCMP தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontario Science Centre மூடப்படுகிறது!

Lankathas Pathmanathan

Torontoவில் இரா.சம்பந்தன் நினைவு அஞ்சலி

Lankathas Pathmanathan

பணவீக்கம் 30 ஆண்டுகளில் இல்லாத உயர்வு

Lankathas Pathmanathan

Leave a Comment