5 முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்கான COVID booster தடுப்பூசி தகுதியை Ontario விரிவுபடுத்துகிறது.
வியாழக்கிழமை (01) முதல் இந்த தடுப்பூசி தகுதியை விரிவுபடுத்த Ontario முடிவு செய்துள்ளது.
Ontario மாகாண தலைமை மருத்துவ அதிகாரி Dr. Kieran Moore புதன்கிழமை (31) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
மாணவர்கள் அடுத்த வாரம் பாடசாலைக்கு திரும்பவுள்ள நிலையில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
தகுதியுடைய குழந்தைகள், அவர்களின் மூன்றாவது தடு்ப்பூசியை அல்லது முதலாவது booster தடுப்பூசியை பெறலாம்.
அவர்களின் மிகச் சமீபத்திய தடுப்பூசிகளை தொடர்ந்து குறைந்தது ஆறு மாத கால இடைவெளியில் அடுத்த தடுப்பூசிகளை பெறலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.