கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கு காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையில் போலி பயணத் திட்டங்களை தவிர்க்குமாறு கனேடியர்களை அமைச்சர் கோரியுள்ளார்.
குடும்பங்கள், குழந்தைகள், சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் Karina Gould இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கடவுச்சீட்டுக்காக காத்திருக்கும் நிலையைத் தவிர்ப்பதற்காக போலியான பயணத் திட்டங்களை காரணமாக்க வேண்டாம் என அவர் கனடியர்களை கோரியுள்ளார்.
சிலர் தங்களின் கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக உடனடி பயணத்தை முன்பதிவு செய்யும் நிலை உள்ளதாக அவர் கூறினார்.
கடவுசீட்டு அலுவலகங்களில் காத்திருப்பு நேரங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டு, பெரும்பாலும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவும் அமைச்சர் Gould கூறினார்.