Toronto, Ottawa நகர முதல்வர்களுக்கு நகர உறுப்பினர்கள் மீதான veto அதிகாரத்தை வழங்க புதிய சட்டம் Ontario மாகாண சபையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டம் புதன்கிழமை (10) பிற்பகல் மாகாண சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
நகர சபைகளில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளால் மட்டுமே முறியடிக்கப்படும் veto அதிகாரங்களை கொண்ட வகையில் இது அமைகிறது.
இது தகுந்த மாற்றங்களைச் செய்யும் திறனை நகர முதல்வர்களுக்கு வழங்கும் என Ontario முதல்வர் Doug Ford ஏற்கனவே கூறியிருந்தார்.