தேசியம்
செய்திகள்

கடுமையான இரத்த பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம்: கனடிய இரத்த சேவைகள் நிறுவனம்

கடுமையான இரத்த பற்றாக்குறையை எதிர்கொள்வதாக கனடிய இரத்த சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்று நாட்களுக்கு தேவையான O+, O- இரத்த வகைகள் மாத்திரம் கைைசம் உள்ளதாக  இன்று இரத்த சேவைகள் நிறுவனம் கூறியது.
தவிரவும் ஐந்து நாட்களுக்கு மட்டும் தேவையான A+, A-, B- இரத்த வகைகள் தன்வசம் உள்ளதாக இன்று கனடிய இரத்த சேவைகள் நிறுவனம்  அதன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
August மாத இறுதிக்குள் 57 ஆயிரம் நன்கொடைகள் தேவை என கடந்த மாதம் கனடிய இரத்த சேவைகள் நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Omicron மாறுபாடு குறித்து அவசரமாக கூடிய G7 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள்

Lankathas Pathmanathan

Ontario ;ஒரு மாதத்திற்கு மேலான காலத்தில் மிகக் குறைவான தொற்றுக்களை பதிவு செய்தது!

Gaya Raja

Nova Scotiaவில் கடுமையான எல்லை கட்டுப்பாடுகள்!

Gaya Raja

Leave a Comment