February 23, 2025
தேசியம்
செய்திகள்

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் வாசல் கதவில் சுற்றுலாப் பேருந்து மோதியது

Ottawaவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் வெளியே உள்ள வாசல் கதவில் சுற்றுலாப் பேருந்து மோதியுள்ளது.

பிரதமரின் இல்லமான 24 Sussex Drive வாசல் கதவு மோதப்பட்ட சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என தெரியவருகிறது.

புதன்கிழமை (03) காலை 9 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் எவரும் கைது செய்யப்படவில்லை அல்லது குற்றம் சாட்டப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது நீண்ட காலமாக கனடாவின் பிரதமர்களின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்து வருகின்ற போதிலும், சீரமைப்பு வேலை காரணமாக Justin Trudeau அங்கு வசிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கனடிய நாடாளுமன்ற வளாக வாசல் கதவை புதன்கிழமை அதிகாலை ஒருவர் வாகனத்தால் மோதிய சம்பவம் நிகழ்ந்தது.

இந்த இரண்டு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Related posts

பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதியத்தை வரையறுக்கும் நீதிமன்ற தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் Ontario

Lankathas Pathmanathan

Ontario, NDP தலைமை பதவிக்கு முதல் வேட்பாளர்!

Lankathas Pathmanathan

தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்து விசாரிக்க புதிய சிறப்பு அறிக்கையாளர் நியமனம்

Lankathas Pathmanathan

Leave a Comment