February 21, 2025
தேசியம்
செய்திகள்

நிறைவுக்கு வந்தது திருத்தந்தையின் கனடிய பயணம்

திருத்தந்தை பிரான்சிஸ் தனது ஆறு நாள் கனடிய பயணத்தை வெள்ளிக்கிழமை (29) மாலை நிறைவு செய்தார்.

Nunavut பிரதேசத்தின் தலைநகர் Iqaluitடில் அவர் தனது பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

தனது கனடிய பயணத்தை முடித்துக் கொள்ளும் வகையில் வெள்ளி காலை பிரான்சிஸ் Quebec நகரில் இருந்து Iqaluit சென்றடைந்தார்.

அங்கு வதிவிட பாடசாலையில் இருந்து தப்பியவர்கள் அவர்களது குடும்பத்தினரை பிரான்சிஸ் சந்தித்தார்.

திருத்தந்தை ஒருவர் இப்பகுதிக்கு பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும்.

திருத்தந்தையின் விமானம் வெள்ளி மாலை Rome நகருக்கான தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

திருத்தந்தையின் இந்த கனடிய பயணம் நல்லிணக்கத்திற்கும் மாற்றத்திற்கும் இடமளிக்கிறது என முதற்குடியினர் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

கனடாவின் வதிவிட பாடசாலைகளில் கத்தோலிக்க திருச்சபை ஆற்றிய பங்கிற்கு போப் பிரான்சிஸ் தனது பயணத்தின் போது இரண்டு முறை பகிரங்க மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை தூதுவருக்கு மதிப்பளித்தமைக்கு மன்னிப்பு கோரியது கனடா கந்தசாமி ஆலயம்

Lankathas Pathmanathan

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது

Lankathas Pathmanathan

Paris Olympics: கனடாவின் முதலாவது பதக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment