1989 ஆம் ஆண்டு முதல் Hockey கனடா பாலியல் துஷ்பிரயோக தீர்வுகளுக்கு 7.6 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ளது.
Hockey கனடாவின் தலைமை நிதி அதிகாரி Brian Cairo புதன்கிழமை (27) இந்த தகவலை வெளியிட்டார்.
பாலியல் வன்கொடுமை, பாலியல் துஷ்பிரயோகக் கோரிக்கைகள் தொடர்பான ஒன்பது தீர்வுகளில் இந்த தொகை செலுத்தப்பட்டுள்ளது.
புதன்கிழமை இரண்டாவது நாளாக நடைபெற்ற நாடாளுமன்ற குழு விசாரணையின் போது தலைமை நிதி அதிகாரி இந்த தகவலை வெளியிட்டார்.
2018ஆம் ஆண்டின் June மாதத்தின் பிற்பகுதியில் நிகழ்ந்ததாக கூறப்படும் கனடாவின் உலக Junior hockey அணியின் உறுப்பினர்கள் தொடர்புடைய பாலியல் வன்கொடுமை குறித்து அண்மையில் தெரியவந்தது .