கனடாவில் புதிய Omicron துணை வகை தொற்று கண்டறியப்பட்டது.
இந்தியாவில் தொற்று நோய்களை உண்டாக்கும் புதிய Omicron துணை வகை கனடாவில் கண்டறியப்பட்டுள்ளது.
BA.2.75 என அறியப்படும், Corona தொற்று பிறழ்வு இந்தியா முழுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
தவிரவும் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து அமெரிக்கா, கனடா உட்பட குறைந்தது 10 நாடுகளில் சிறிய எண்ணிக்கையில் இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
July 6ஆம் திகதி வரை கனடாவில் ஐந்து BA.2.75 தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
கனடா உட்பட பல நாடுகளில், சமீபத்திய மாதங்களில் COVID கண்காணிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது.
இதனால் உண்மையான தொற்றுகளின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை விட அதிகமாக இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது