17 மில்லியன் கனடியர்கள் ஐந்து மாதங்களில் Omicron தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இன்று வெளியான அறிக்கை ஒன்று கூறுகிறது.
December 2021 முதல் May 2022 வரையிலான ஐந்து மாதங்களில் மட்டும் 17 மில்லியன் கனடியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என புதன்கிழமை (06) வெளியான தரவுகள் தெரிவிக்கின்றன.
இது ஒரு நாளைக்கு சராசரியாக 100,000 தொற்றுகளை குறிக்கிறது.
அண்மையில் கனடாவின் பல பகுதிகளில் தினசரி தொற்றுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
வரவிருக்கும் நாட்களில் மேலும் பல தொற்றுகள் பதிவாகும் என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.
கனடியர்களில் அதிக சதவீதத்தினர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர்.
ஆனால் பெரும்பாலான இளைஞர்கள் மூன்றாவது தடுப்பூசியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.