December 12, 2024
தேசியம்
செய்திகள்

Ontarioவில் 17 சதம் வரை குறையும் எரிபொருளின் விலை

Ontario மாகாணத்தில் இந்த நீண்ட வார விடுமுறையில் எரிபொருளின் விலை 17 சதம் வரை குறையலாம் என எதிர்வு கூறப்படுகிறது.

Ontario அரசாங்கம் கனடா தினம் முதல் ஆறு மாதங்களுக்கு எரிவாயு வரியில் அதன் பகுதியை லிட்டருக்கு 5.7 சதங்கள் குறைக்க உள்ளது.

வெள்ளிக்கிழமை (01) காலை Ontarioவில் எரிபொருளின் சராசரி விலை லிட்டருக்கு 11 சதத்தினால் குறைகிறது.

சனிக்கிழமை (02) எரிபொருளின் சராசரி விலை லிட்டருக்கு மேலும் 6 சதத்தினால் குறைகிறது.

இதன் மூலம் நீண்ட வார விடுமுறையில் Ontarioவில் ஒரு லிட்டர் எரிபொருளின் சராசரி விலை 1.879 சதமாக இருக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

ஆனாலும் இந்த நிவாரணம் தற்காலிகமாக இருக்கும் என எச்சரிக்கப்படுகிறது.

July மாதத்தின் இரண்டு வாரங்களுக்கு பின்னர் ஒரு லிட்டர் எரிபொருளின் சராசரி விலை 2 டொலர் 20 சதம் முதல் 2 டொலர் 25 சதம் வரை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Related posts

பெரிய வியாபார நிலையங்களுக்கு செல்பவர்கள் தடுப்பூசி கடவுச்சீட்டை வைத்திருப்பது அவசியம்

Lankathas Pathmanathan

Ontario மாகாண பொது வைத்தியசாலையில் COVID பரவல்?

Lankathas Pathmanathan

Pearson விமான நிலையத்தில் 20 மில்லியன் டொலர் கொள்ளை

Leave a Comment