Latviaவில் மேம்படுத்தப்பட்ட NATO படையை வழி நடத்த கனடா இணங்கியுள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த், Latviaவின் பாதுகாப்பு அமைச்சருடன் இதற்கான ஒப்பந்தத்தில் புதன்கிழமை (29) கையெழுத்திட்டார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம் குறித்து பிரதானமாக உரையாடப்படும் NATO உச்சி மாநாட்டில் இந்த ஒப்பந்தம் கைசாத்தானது.
இந்த நிகழ்வில் பிரதமர் Justin Trudeau கலந்து கொண்டார்.
Latviaவில் கனடா தலைமையிலான இராணுவ நடவடிக்கைக்கான அடுத்த படிகளை இந்த ஒப்பந்தம் அமைக்கிறது என Trudeau கூறினார்.