February 23, 2025
தேசியம்
செய்திகள்

Yonge வீதி வாகன தாக்குதல் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

Torontoவின் 2018 ஆம் ஆண்டு வாகன தாக்குதலுக்குக் காரணமான நபருக்கு திங்கட்கிழமை (13) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Yonge வீதியில் நிகழ்ந்த இந்த தாக்குதலில் இலங்கையை சேர்ந்த ஒரு பெண் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

April மாதம் 23ஆம் திகதி 2018ஆம் ஆண்டு நிகழ்ந்த  இந்த தாக்குதலில் எட்டு பெண்களும் இரண்டு ஆண்களும் இறந்தனர்.

இந்த தீர்ப்பில் குற்றவாளி Alek Minassianக்கு 25 ஆண்டுகள் நன்னடத்தை பிணை வாய்ப்பு இல்லை என நீதிபதி வலியுறுத்தினார்.

அவருக்கு 15 கொலை முயற்சிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு அவர் 10 முதல் நிலை கொலை, 16 கொலை முயற்சி வழக்குகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

Related posts

Ontarioவில் தொற்றுக்கள் மீண்டும் மூவாயிரத்தை தாண்டியது!

Gaya Raja

காசாவில் மூன்று கனடியர்கள் கடத்தல்?

Lankathas Pathmanathan

வர்த்தக அமைச்சர் Mary Ng நெறிமுறை விதிகளை மீறினார்!

Lankathas Pathmanathan

Leave a Comment