Ontario மாகாணத்தில் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் பெரும்பாலான COVID முகமூடி கட்டுப்பாடுகள் இந்த வார இறுதியில் நீக்கப்படுகின்றன.
Ontarioவின் தலைமை சுகாதார அதிகாரி Dr. Kieran Moore புதன்கிழமை (08) வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
பொதுப் போக்குவரத்து உட்பட, மாகாணத்தின் பெரும்பாலான முகமூடி கட்டுப்பாடுகள் எதிர்வரும் சனிக்கிழமை (11) நள்ளிரவு 12:00 மணியுடன் காலாவதியாவதை அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
கடந்த April மாதம் இறுதியாக நீட்டிக்கப்பட்ட முகமூடி கட்டுப்பாடுகள் எதிர்வரும் சனிக்கிழமை காலாவதியாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் நீண்ட கால பராமரிப்பு இல்லங்கள், முதியோர் இல்லங்களில் முகமூடி கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுலில் இருக்கும்.
அதேவேளை பாதுகாப்பற்ற இடங்களில் தொடர்ந்து முகமூடி அணிவதை Ontario சுகாதார அமைச்சகம் பரிந்துரைக்கிறது.