February 22, 2025
தேசியம்
செய்திகள்

2022இல் இதுவரை 107 இறப்புகள் Ontario நெடுஞ்சாலையில் நிகழ்ந்துள்ளன

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத மோசமான நெடுஞ்சாலை உயிரிழப்புகளை 2022ஆம் ஆண்டு இதுவரை எதிர்கொண்டுள்ளது என Ontario மாகாண காவல்துறையினர் தெரிவித்தனர்.

2022 ஆம் ஆண்டில், செவ்வாய்க்கிழமை (17) வரை 107 இறப்புகள் நெடுஞ்சாலையில் நிகழ்ந்துள்ளதாக OPP தெரிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டிலிருந்து May மாதம் இரண்டாவது வாரத்தில் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டவில்லை என OPP கூறியது.

ஓட்டுநர் கவனக்குறைவு, மது அல்லது போதைப்பொருள் தொடர்பான மரணங்கள் இந்த வருடம் அதிகரித்துள்ளதாக OPP தெரிவித்துள்ளது

ஓட்டுநர்களின் கவனக்குறைவால் ஏற்படும் இறப்புகள் கடந்த ஆண்டின் இந்த காலத்தை  விட 79 சதவீதம் அதிகரித்துள்ளது என OPP தெரிவித்துள்ளது.

இதே கால எல்லையில் மது அல்லது போதைப்பொருள்  தொடர்பான இறப்புகள்ள 36 சதவீதம் அதிகரித்துள்ளதாக OPP கூறியது.

கனடாவின் தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தின் போது OPP வெளியிட்ட தரவுகளில் இந்த விபரம்  வெளியிடப்பட்டது.

Related posts

Ontarioவில் முகமூடி கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டும்!.

எல்லைப் பணியாளர்கள் ;வெள்ளிக்கிழமை காலை முதல் வேலை நிறுத்தத்தம்!

Gaya Raja

Ontario அரசின் பாடசாலைக்குத் திரும்பும் திட்டம் வெளியானது!

Gaya Raja

Leave a Comment