February 23, 2025
தேசியம்
செய்திகள்

North York நகரில் ஒருவர் வாகனத்தால் மோதப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழர் கைது

North York நகரில் ஒருவர் வாகனத்தால் மோதப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

புதன்கிழமை (04) இரவு North York நகரில் வாகனத்தால் மோதப்பட்ட ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்ற நபரை Toronto கைது செய்துள்ளனர்.

கைதானவர் Brampton நகரை சேர்ந்த 21 வயதான அனுஜன் சுதாகரன் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

புதன்கிழமை பின்னிரவு 11:15 மணியளவில் Finch Ave W and Keele Street சந்திப்புக்கு அருகாமையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

மின்சார மிதிவண்டியில் (electric scooter) பயணித்த 41 வயதானவரை வாகனத்தால் மோதியதாக Toronto காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இவரை வாகனத்தினால் மோதிய சாரதியான அனுஜன் சுதாகரன் சம்பவ இடத்தில் நிற்காமல், தப்பிச் சென்றதான காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவர் மீது விபத்து நிகழ்ந்த இடத்தை விட்டு தப்பிச்சென்றது உட்பட குற்றச் சாட்டுகள் பதிவாகியுள்ளன.

இவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

முதற்குடியினர் குழந்தை நல மேல்முறையீடுகளை நீதிமன்றம் தள்ளுபடி! 

Gaya Raja

சீனாவுடன் தொடர்புடையதாக கூறப்படும் நிறுவனத்திற்கு RCMP ஒப்பந்தம்: பிரதமர் அதிருப்தி

Lankathas Pathmanathan

இரண்டு தொகுதிகளில் Liberal, இரண்டு தொகுதிகளில் Conservative வெற்றி!

Lankathas Pathmanathan

Leave a Comment