உக்ரைன் தலைநகரில் உள்ள கனடிய தூதரகத்தை மீண்டும் திறப்பது குறித்து கனடா தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.
வெளிவிவகார அமைச்சர் Melanie Joly ஒரு அறிக்கையில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
மேற்கு உக்ரைனில் இருந்து ரஷ்யா பின் வாங்கிய நிலையில், கனடா இந்த விடயத்தில் கவனம் செலுத்துவதாக அமைச்சர் கூறினார்.
எங்கள் தூதரகத்தை திறப்பது உக்ரைனுக்கான வலுவானதும் தொடர்ச்சியானதுமான ஆதரவை வெளிப்படுவதுவதுடன் கனேடியர்களுக்கான சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதற்கான வழிமுறையாகும் என Joly குறிப்பிட்டார்.
ஆனாலும் தூதரக ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே முதன்மையானது என அமைச்சர் கூறினார்.
February நடுப்பகுதியில், Kyivவில் உள்ள தூதரக நடவடிக்கைகளை கனடா நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.