எரிவாயு, எரிபொருள் வரிகளை தற்காலிகமாக குறைக்கும் சட்டமூலத்தை Ontario அரசாங்கம் திங்கட்கிழமை (04) அறிமுகப்படுத்தியது.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், எரிவாயு வரி லிட்டருக்கு 5.7 சதத்தினால் குறைக்கப்படும்.
எரிபொருள் வரி லிட்டருக்கு 5.3 சதத்தினால் குறைக்கப்படும்.
இந்த வரி குறைப்பு ஆறு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாற்றம் July 1ஆம் திகதி அமுலுக்கு வந்து December 31ஆம் திகதி முடிவடையும்.
கனடா முழுவதும் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.