முதியவர்களை குறிவைக்கும் பண மோசடியில் Toronto காவல்துறையினர் ஒரு தமிழர் உட்பட ஐவரை கைதுசெய்து குற்றச் சாட்டுக்களை பதிவு செய்துள்ளனர்.
Toronto பெரும்பாகத்தில் தாத்தா பாட்டிகளை (grandparents) குறிவைத்து பண மோசடி செய்பவர்களுக்காக 1.1 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டிய மோசடியில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுபோன்ற ஒரு மோசடி குறித்த குற்றச்சாட்டை Stouffville நகரை சேர்ந்த 22 வயதான அஜந்தன் ஸ்ரீ ரஞ்சன் என்ற தமிழரும் எதிர்கொள்கின்றார்.
December 2021 முதல் இந்த மோசடி தொடர்பாக காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரில் இவரும் ஒருவராவார்.
March 2021 முதல், இது போன்ற மோசடி குறித்து சுமார் 100 புகார்கள் Toronto காவல்துறையில் பதிவாகியுள்ளதாக புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.