Ontarioவில் 800க்கும் மேற்பட்டவர்கள் COVID தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சுகாதார அதிகாரிகள் வியாழக்கிழமை (31) 807 பேர் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இவர்களின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 166 பேரும் அடங்குகின்றனர்.
வியாழனன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை பதிவான 778 பேரை விட அதிகமானதாகும்.
வியாழக்கிழமைமேலும் ஆறு மரணங்கள் தொற்றின் காரணமாக Ontarioவில் பதிவானது.
தொற்றின் ஆரம்பத்தில் இருந்து இதுவரை 12,433 மரணங்கள் Ontarioவில் பதிவானது.
Quebecகில் வியாழக்கிழமை1,238 பேர் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.