தேசியம்
செய்திகள்

உக்ரைனுக்கு கனடாவின் உறுதியான ஆதரவு: மீண்டும் உறுதிப்படுத்தினார் Trudeau!

ரஷ்யாவுடனான புதிய போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் குறித்து, உக்ரேனிய ஜனாதிபதியும் கனடிய பிரதமரும் திங்கட்கிழமை (28) உரையாடினார்.

ஜனாதிபதி Volodymyr Zelenskyயுடனான உரையாடலின்போது, தொடரும் ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பு, உக்ரைனின் மக்கள், உள்கட்டமைப்பு, பொருளாதாரத்திற்கு பேரழிவு தரும் பாதிப்புகள் குறித்து பிரதமர் Justin Trudeau விவாதித்துள்ளார்.

மனிதாபிமான, நிதி, இராணுவ ஆதரவு, ரஷ்யாவிற்கு எதிரான கூடுதல் தடைகள் உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களும் உரையாடினர்.
உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை, சுதந்திரத்திற்கு கனடாவின் உறுதியான ஆதரவை Trudeau மீண்டும் உறுதிப்படுத்தினார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ரஷ்ய படையெடுப்பு எரிபொருள் விலைகளை உயர்த்தும் அதே வேளையில், பசுமையான எரிபொருள் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கு உலகை நகர்த்துவதற்கு உத்வேகத்தை அளிக்கிறது என திங்களன்று Trudeau கூறியிருந்தார்.

Related posts

Edmonton காவல்துறை அதிகாரிகள் இருவர் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

Torontoவில் காணாமல் போயுள்ள தமிழ் பெண்

Lankathas Pathmanathan

மூன்று GM தொழிற்சாலைகளில் மறியல் போராட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment