தேசியம்
செய்திகள்

அவசர காலச் சட்டம் குறித்த ஆய்வை அரசாங்கம் பலவீனப்படுத்த முயற்சிப்பதாக குற்றச் சாட்டு

அவசர காலச் சட்ட மறு ஆய்வுக் குழுவின் அமைப்பு தொடர்பாக கட்சிகளுக்குள் மோதல் நிலை தோன்றியுள்ளது.
நாடாளுமன்ற மறு ஆய்வுக் குழுவில் உறுப்பினர், தலைவர் பதவிகள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன என்பதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவை Conservative கட்சி ஏற்க மறுக்கிறது.
தமது  கட்சிக்கு முக்கியப் பங்கு வழங்காமல் Liberal அரசாங்கம் அவசர காலச் சட்டத்தை பயன்படுத்துவது குறித்த ஆய்வை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக Conservative கட்சி குற்றம் சாட்டுகிறது.
Liberal அரசாங்கத்தின்  முன்மொழிவை நிராகரிப்பதாக Conservative கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர்  John Brassard, துணை தலைவர் Luc Berthold ஆகியோர் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
NDPயின்  ஆதரவுடன் Liberal அரசாங்கம் சட்டத்தின் கீழ் தேவைப்படும் பொறுப்புக்கூறல், மேற்பார்வை பொறிமுறைகளை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
ஆனாலும் இந்த விமர்சனத்தை அரசாங்கத்தின் நாடாளுமன்ற குழு தலைவர் Mark Holland நிராகரித்தார்.
Conservative கட்சிக்கு வழங்கப்பட்டது  சமநிலையான பங்கு எனவும் அவர் கூறினார்.

Related posts

Doug Fordக்கு  எதிராக போராட்டம் நடத்திய  பெண் காவல்துறையினரால் கைது

Lankathas Pathmanathan

முன்னாள் CBC ஊடகவியளாளர் வீதியில் தாக்கப்பட்டு மரணம்

Lankathas Pathmanathan

April மாதத்தின் ஆரம்பத்தில் நான்காவது தடுப்பூசி குறித்த வழிகாட்டுதல் வெளியாகும்

Leave a Comment