ஒரு வருடத்தில் மிகப்பெரிய ஆயுட்கால சரிவுக்கு COVID பங்களித்துள்ளது என கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்தது.
COVID தொற்று கனடாவில் இதுவரை பதிவு செய்யப்படாத மிகப்பெரிய ஒற்றை வருட ஆயுட்கால வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என திங்கட்கிழமை (24) வெளியான புள்ளிவிபரத் திணைக்கள அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
2020இல், ஆயுட்காலம் 81.7 ஆண்டுகளாக பதிவாகியுள்ளது.
இது 2019இல் 82.3 ஆண்டுகளாக இருந்து, 0.6 ஆண்டுகள் குறைந்துள்ளது.
1921இல் புள்ளி விவரங்கள் பதிவு செய்ய ஆரம்பித்ததிலிருந்து இது ஆயுட்காலத்தின் மிகப் பெரிய வீழ்ச்சியாகும்.
2020இல், Quebecகில் ஆயுட்காலம் மிகப்பெரிய சரிவைக் கண்டது.
அதைத் தொடர்ந்து Ontario இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஆண்களின் ஆயுட்காலம் வீழ்ச்சி பெண்களை விட அதிகமாக இருந்தது.